உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அடிப்படை வசதியில்லாத நந்திவரம் அரசு பள்ளி

அடிப்படை வசதியில்லாத நந்திவரம் அரசு பள்ளி

கூடுவாஞ்சேரி:நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி, நந்திவரம் நெல்லிக்குப்பம் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.இந்த பள்ளியில் 2000 க்கும் மேற்பட்ட, மாணவர்கள் படித்து வருகின்றனர்.இங்கு உள்ள மாணவர்களுக்கு குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் குறைவாக இருப்பதாக, மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பாக, சமூகஆர்வலர் ஒருவர் தெரிவித்ததாவது:நந்திவரத்தில் உள்ள, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அதிகமான, மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் போதுமானதாக இல்லை. மாணவர்கள் சிரமம் அடைகின்றனர்.எனவே கூடுதல் கழிப்பறைகள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். மேலும் இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி