மேலும் செய்திகள்
மகளிர் குழு கட்டடத்தில் துணை சுகாதார நிலையம்
06-Oct-2025
திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த சிறுங்குன்றம் கிராமத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. தினமும், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகின்றனர். இங்கு போதிய இடவசதியின்றி, கட்டடமும் பழுதடைந்து இருந்தது. எனவே, சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, சுற்றுப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் காரணமாக, 1.50 கோடி ரூபாய் மதிப்பில் தரைத்தளம், முதல் தளம் கொண்ட புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது, இதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
06-Oct-2025