உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செய்யூர் அரசு கல்லுாரிக்கு புது கழிப்பறை

செய்யூர் அரசு கல்லுாரிக்கு புது கழிப்பறை

செய்யூர்:புதிதாக துவக்கப்பட்டுஉள்ள செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு, 20 லட்சம் ரூபாயில் புதிய கழிப்பறை கட்டடம் அமைக்கும் பணி துவக்கப்பட்டு உள்ளது.செய்யூரில், கடந்த மே மாதம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி புதிதாக துவக்கப்பட்டது.5 பாடப் பிரிவுகளின் கீழ், 270 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கலந்தாய்வுகள் நடந்து வருகின்றன. 140 பேர் கல்லுாரியில் சேர்க்கை பெற்றுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக வகுப்புகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், ஊரக வளர்ச்சித்துறை சார்பாக, 20 லட்சம் ரூபாயில், கல்லுாரிக்கு புதிய கழிப்பறை கட்டும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை