உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தியேட்டரில் படம் பார்த்த புதுமாப்பிள்ளை மாரடைப்பால் பலி

தியேட்டரில் படம் பார்த்த புதுமாப்பிள்ளை மாரடைப்பால் பலி

திருப்போரூர், சென்னை, மந்தைவெளியைச் சேர்ந்தவர் மெல்வின்,29; தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன், காயத்ரி என்பவருடன் திருமணம் நடைபெற்றது.நேற்று முன்தினம் புதுமண தம்பதி, சிறுசேரி அருகே ஏகாட்டூர் தனியார் மாலில் உள்ள திரையரங்கில் படம் பார்க்க வந்தனர்.நேற்று முன்தினம் மாலை 3:00 மணியளவில் படம் பார்த்துக் கொண்டிருந்த போது, மெல்வினுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளார்.உடனே, அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மெல்வினை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். தகவலின்படி, கேளம்பாக்கம் போலீசார் மருத்துவமனைக்கு சென்று, மெல்வின் உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை