மேலும் செய்திகள்
தொண்டி மணிமுத்தாறு பாலம் 'பளிச்'
06-Nov-2024
அக்கரை:சோழிங்கநல்லுாரில் இருந்து இ.சி.ஆர்., நோக்கி செல்லும், கே.கே.சாலையின் குறுக்கே பகிங்ஹாம் கால்வாய் செல்கிறது.இப்பாலத்தில், கடந்த மாதம் 21ம் தேதி, பைக்கில் சென்ற கல்லுாரி மாணவி, எதிர் திசையில் வந்த வாகனத்திற்கு வழிவிடும்போது, கழிவுநீர் லாரி மோதி பலியானார்.இச்சம்பவத்திற்கு பிறகும், எதிர் திசையில் வரும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், நேராக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் பயணித்தனர்.இந்நிலையில், சோழிங்கநல்லுார் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் குழுவினர், பகிங்ஹாம் கால்வாய் பாலத்தில் சோதனை செய்து, எதிர் திசையில் வந்த வாகனங்களுக்கு, அபராதம் விதித்தனர். இந்த நடவடிக்கை தொடரும் என, அதிகாரிகள் கூறினர். இதன்வாயிலாக, நேராக செல்லும் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.
06-Nov-2024