உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செய்தி எதிரொலி சாலையோரம் குவிக்கப்பட்டிருந்த ஆகாய தாமரை கழிவுகள் அகற்றம்

செய்தி எதிரொலி சாலையோரம் குவிக்கப்பட்டிருந்த ஆகாய தாமரை கழிவுகள் அகற்றம்

வண்டலுார்:நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, வண்டலுாரில், சாலையோரம் குவிக்கப்பட்டு, போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த ஆகாய தாமரை கழிவுகள் அகற்றப்பட்டன.வண்டலுார், தாங்கல் ஏரிக்கு எதிரே, சித்தி விநாயகர் கோவில் அருகே, 2022ல், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் வாயிலாக, 23.55 லட்சம் ரூபாய் செலவில், 50 சென்ட் இடத்தில் புதிய குளம் உருவாக்கப்பட்டது.மழைநீர் தேங்குவதற்காக அமைக்கப்பட்ட குளம், உரிய பராமரிப்பின்றி, பல வீடுகளின் கழிவுநீர்த் தேக்கமாகவும், ஆகாயத் தாமரை படர்ந்து, கொசுக்களின் உற்பத்திக்கூடமாகவும் மாறியது.இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, குளத்தில் இருந்த ஆகாயத்தாமரையை அகற்றி, குளத்தை துார் வார, பகுதிவாசிகள் கோரிக்கை வைத்தனர்.ஆனால், ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், வண்டலுார் பகுதி அ.தி.மு.க.,வினர் ஒன்றிணைந்து, குளத்தில் இருந்த ஆகாய தாமரையை அகற்றி, சாலையோரம் குவித்தனர்.இதில், 10 டன் எடை அளவில், சாலையோரம் மலை போல் குவிக்கப்பட்ட ஆகாய தாமரை கழிவு, போக்குவரத்திற்கு இடையூறாக மாறியது.இதை அகற்ற, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள், வாகன ஓட்டிகள் கோரிக்கை எழுப்பினர். இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, டிராக்டர்கள் வரவழைக்கப்பட்டு, 'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக மொத்த கழிவுகளும் நேற்று முன்தினம் அகற்றப்பட்டன. இதனால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை