செய்தி எதிரொலி செய்யூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் திறப்பு
செய்யூர் செய்யூர் வருவாய் குறுவட்டம் அம்மனுார் ,புத்துார், பெரும்பாக்கம், கடுகுப்பட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கி செயல்படுகிறது.இலவச வீட்டுமனைபட்டா பெற, முதியோர் உதவித்தொகை மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் பெற செய்யூர் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்தவர் தினசரி ஏராளமானோர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.பல ஆண்டுகளாக வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு தனி கட்டடம் கட்டப்படாமல் இருந்ததால் செய்யூர் பள்ளி எதிரே உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டடத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வந்தது.போதிய இடவசதி இல்லாமல் அதிகாரிகள் சிரமப்பட்டு வரும் நிலையில், கடந்த ஆண்டு செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் பின்புறம் 28 லட்சத்தில் புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கட்டப்பட்டு, நீண்ட நாட்களாக செயல்படாமல் பூட்டி இருந்தது.இதுகுறித்து நம் நாளிதழில் செயதி வெளியானது. இதையடுத்து வருவாய் ஆய்வாளர் அலுவலகம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.