மேலும் செய்திகள்
பொங்கல் விழா; கோவில்களில் சிறப்பு வழிபாடு
15-Jan-2025
அச்சிறுபாக்கம்:தின்னலுாரில் போலாச்சியம்மன் கோவில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடந்தது.அச்சிறுபாக்கம் அடுத்த தின்னலுார் ஊராட்சியில் மிகப் பழமை வாய்ந்த, கிராம தேவதையான போலாச்சியம்மன் கோவில் உள்ளது.ஆண்டுதோறும் தை பொங்கல் முடிந்து, இரண்டாம் நாளில் போலாச்சியம்மன் தேர் திருவிழா, நேற்று, வெகு விமர்சையாக நடந்தது.சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், கோவில் வளாகத்தில் ஊரணி பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.விரதம் இருந்து பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் உள்ளிட்ட நேர்த்தி கடன் செலுத்தினர்.பகல் 12:00 மணியளவில் காத்தவராயன் ஊர் சுற்றி வருதல் நிகழ்வும், மாலை 3:00 மணியளவில் தேர் திருவிழாவும் நடந்தது.பின், இரவு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் போலாச்சியம்மன் திருவீதி உலா வந்தார்.பக்தர்கள் வீடுகளில், கற்பூரம் ஏற்றி, ஆரத்தி எடுத்து அம்மனை வழிபட்டனர்.
15-Jan-2025