உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வடமாநில தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பலி

வடமாநில தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பலி

பவுஞ்சூர்:பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் மனோஜ் மாலிக், 35; கூலித்தொழிலாளி.பவுஞ்சூர் அடுத்த நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கமலகண்ணன் என்ற நெல் வியாபாரியிடம், கடந்த 10 நாட்களாக நெல் மூட்டை ஏற்றும் வேலை செய்து வந்தார்.இதேபோல் நேற்று நெல் ஏற்ற, நீலமங்கலத்தில் உள்ள சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான வயலுக்கு, லாரியில் சென்றார். அப்போது, நேற்று மதியம் 2:00 மணியளவில், வயல்வெளியில் தாழ்ந்து சென்ற மின்கம்பிகள் லாரி மீது உரசியுள்ளன.இதில், லாரியில் இருந்த மனோஜ் மாலிக் மீது மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த அணைக்கட்டு போலீசார், மனோஜ் மாலிக் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பீஹாரில் உள்ள அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை