மேலும் செய்திகள்
60 வயது மூதாட்டி சடலம் மீட்பு
19-Nov-2024
சூணாம்பேடு, சூணாம்பேடு அடுத்த கொளத்துார் பகுதியில் உள்ள கழிவெளி பாலத்தின் மேல், நேற்று காலை அடையாளம் தெரியாத சடலம் கிடப்பதை கண்ட அப்பகுதிவாசிகள், சூணாம்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூணாம்பேடு போலீசார், உடலை கைப்பற்றி மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரித்தனர்.முதற்கட்ட விசாரணையில், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை கண்டிவலியைச் சேர்ந்த மனன் சேத், 30, என்பதும், இவர், 'நிசான்' காரில், புதுச்சேரியில் இருந்து சென்னை சென்றபோது, காரை பாலத்தின் கீழே நிறுத்திவிட்டு, கொளத்துார் பகுதியில் உள்ள கழிவெளியை வேடிக்கை பார்க்க சென்றுள்ளார்.அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சூணாம்பேடு போலீசார் 'சிசிடிவி' கேமரா காட்சிகளை கொண்டு விசாரித்து வருகின்றனர்.
19-Nov-2024