உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இந்தியாவில் அணுமின் உற்பத்தி 2047ல் 100 கிகா வாட் இலக்கு அணுமின் நிலைய இயக்குனர் தகவல்

இந்தியாவில் அணுமின் உற்பத்தி 2047ல் 100 கிகா வாட் இலக்கு அணுமின் நிலைய இயக்குனர் தகவல்

கல்பாக்கம், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், சென்னை அணுமின் நிலையத்துடன் இணைந்து, கதிரியக்க அவசரநிலை ஒத்திகையை, வரும் 9ம் தேதி நடத்துகிறது.இதையொட்டி, அணுமின் நிலைய இயக்குனர் சேஷையா, தொழில்நுட்ப தணிக்கையாளரும், அவசரநிலை குழு செயலருமான ரவிசங்கர், பிற நிர்வாகிகள் வாசுதேவன், நிர்மலாதேவி உள்ளிட்டோர், நேற்று முன்தினம் கல்பாக்கத்தில் நிருபர்களை சந்தித்தனர்.நிலைய இயக்குனர் கூறியதாவது:அணுமின் நிலையத்தில் பாதுகாப்பிற்கே முதலிடம். அதன்பின் தான் மின்சார உற்பத்தி துவங்கும். இந்நிலையம் பாதுகாப்பு அம்சங்களுடன் இயங்கி வருகிறது.கதிரியக்கம் பரவும் அபாயம் என்பது மிக மிக குறைவுதான். அத்தகைய அவசரநிலை ஏற்பட்டால், பொதுமக்களை பாதுகாப்பது முக்கியம். அதற்கான விழிப்புணர்விற்காகவே, மாவட்ட நிர்வாகம் ஒத்திகையை நடத்துகிறது. தொழில்நுட்ப உதவியை நாங்கள் அளிப்போம்.அவசரநிலை ஏற்பட்டால், அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட, ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாடு அடிப்படையில், ஒத்திகை நடத்தப்படும்.வருவாய் உள்ளிட்ட முக்கிய துறையினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து, அத்துறை ஊழியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம். ஒத்திகை நாளில், ஒவ்வொரு துறை ஊழியர்களும் கதிரியக்கம் பரவுவதாக அறிவிக்கப்படும் பகுதிக்கு, எவ்வாறு விரைந்து செல்கின்றனர் உள்ளிட்ட நடவடிக்கைகள் பரிசோதிக்கப்படும். இந்த ஒத்திகையால், மக்களுக்கு இடையூறு ஏற்படாது.நாடு முழுதும் உள்ள ரசாயனம், உயிரியல், அணுசக்தி ஆகிய தொழில்துறைகளில், 24 மணி நேர கவனம் அவசியம் என்றும், அவற்றால் ஏதேனும் நிகழ்ந்தால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்றும், மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.பிரிட்டன் நாட்டில், 126 ஆண்டுகளாக இயங்கிய இறுதி அனல்மின் நிலையம், தற்போது மூடப்பட்டுள்ளது. மின்சார உற்பத்திக்கு, அணுசக்தி மட்டுமே வாய்ப்பாக உள்ளது.நம் நாட்டில், 2047ல் அணுசக்தி வாயிலாக, 100 கிகா வாட் மின் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2070ல் துாய்மை மின்சார உற்பத்திக்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ