உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாலாற்றில் முதியவர் சடலம் மகனே கொன்றது அம்பலம்

பாலாற்றில் முதியவர் சடலம் மகனே கொன்றது அம்பலம்

மதுராந்தகம், படாளம் அடுத்த புளிப்பரக்கோவில் பாலாற்றில், கடந்த 25ம் தேதி, அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது.தகவலின்படி அப்பகுதிக்குச் சென்ற படாளம் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். இதில், அந்த நபர் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு நபர்களை, நேற்று முன்தினம் கைது செய்து விசாரித்த போலீசார், அவர்களை மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.இக்கொலை சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:மதுராந்தகம் அடுத்த நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 28. இவரது தந்தை சங்கர், 60.இவர்கள், அதே கிராமத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நபர்களுடன், திருக்கழுக்குன்றம் அடுத்த ஆனுார் பகுதியில், செங்கல் சூளைக்கு வேலைக்குச் சென்றுள்ளனர்.அங்கு, கடந்த 23ம் தேதி இரவு, முருகனும் அவரது தந்தை சங்கரும் மது குடித்து உள்ளனர்.மது போதையில், இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் கோபமடைந்த முருகன், கல்லால் சங்கர் தலையில் பலமாக தாக்கியுள்ளார். அதில், சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இதனால் பயந்து போன முருகன், மறுநாள் 24ம் தேதி காலை, மதுராந்தகம் அடுத்த வள்ளுவபாக்கம் பகுதியைச் சேர்ந்த அவரது மாமனார் ரவி, 60, என்பவருக்கு தகவல் அளித்துள்ளார்.இருவரும் சேர்ந்து, சங்கர் உடலை இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்து, படாளம் அடுத்த புளிப்பரக்கோவில் சுடுகாடு அருகே, பாலாற்றில் புதைத்துள்ளனர்.இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ