உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பரனுார் அருகே விபத்தில் ஒருவர் பலி

பரனுார் அருகே விபத்தில் ஒருவர் பலி

செங்கல்பட்டுதிருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாமண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் எட்டியப்பன்,53.நேற்று காலை சென்னை, கொங்கையூரில் இருந்து உறவினர் குப்புசாமி, 62, என்பவருடன்,'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில், மாமண்டூர் நோக்கிச் சென்றார்.ஸ்கூட்டரை, குப்புசாமி ஓட்டினார்.ஜி.எஸ்.டி., சாலையில் பரனுார் ரயில்வே மேம்பாலம் மீது சென்ற போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், இவர்களது ஸ்கூட்டரில் மோதியது.இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், எட்டியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.காயமடைந்த குப்புசாமியை அங்கிருந்தோர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எட்டியப்பன் உடலை மீட்ட செங்கல்பட்டு தாலுகா போலீசார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை