உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கிளாப்பாக்கத்திற்கு குடிநீர் திட்டம் பாண்டூரில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு

கிளாப்பாக்கத்திற்கு குடிநீர் திட்டம் பாண்டூரில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த கிளாப்பாக்கம் ஊராட்சிப் பகுதியில், பல ஆண்டுகளாக குடிநீர் பற்றாக்குறை உள்ளது. அப்பகுதியை ஒட்டியுள்ள பாண்டூர் ஊராட்சி பாலாற்றுப் படுகையில், ஆழ்துளை கிணறு அமைத்து, கிளாப்பாக்கம் பகுதிக்கு குடிநீர் வினியோகிக்க, வட்டார வளர்ச்சி நிர்வாகம் ஏற்பாடு செய்தது.அதற்காக, மாவட்ட ஊராட்சியின், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், 10 லட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது.பாண்டூர் பகுதியின் ஒரு தரப்பினர், தங்கள் பகுதி ஆற்றிலிருந்து, வேறு ஊராட்சிப் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என, தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆழ்துளை கிணறு அமைக்கவிடாமலும் தடுக்கின்றனர்.இதுதொடர்பாக, பாண்டூர் எதிர்ப்பாளர்களுடன் சமாதானம் பேச, இரண்டு முறை தாலுகா அலுவலகம் அழைத்தும், அவர்கள் புறக்கணித்தனர்.இதையடுத்து, பாண்டூர் ஊராட்சி அலுவலகத்தில், தாசில்தார் ராதா, வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கருடன், கடந்த 20ம் தேதி நடத்திய சமாதான கூட்டத்தில், எதிர்ப்பாளர்கள் தாசில்தாரை எதிர்த்து, தகராறு செய்தனர்.இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன், கடந்த 23ம் தேதி, பாண்டூரில் ஆழ்துளை கிணறு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், அரசியல் பிரமுகர்கள் தலையீட்டால், அப்பணிகள் நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, தாலுகா அலுவலகத்தில், தாசில்தார், பாண்டூரின் ஒரு பகுதியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 10க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, கிளாப்பாக்கத்திற்கு குடிநீர் வழங்க மறுத்து, கூட்டத்திலிருந்து கலைந்து விட்டதாக, வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.பாண்டூர் உள்ளாட்சி தேர்தல் விரோதம் காரணமாகவே, இச்சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் அச்சிக்கலை தீர்த்து, கிளாப்பாக்கம் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும், கிளாப்பாக்கம் பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ