உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அச்சிறுபாக்கம் அருகே லாரி மோதி ஒருவர் பலி

அச்சிறுபாக்கம் அருகே லாரி மோதி ஒருவர் பலி

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் காவல் எல்லைக்கு உட்பட்ட பெரும்பேர்கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன், 47.இவர் நேற்று, அவருக்குச் சொந்தமான 'ஸ்பிளெண்டர் பிளஸ்' இருசக்கர வாகனத்தில், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மேல்மருவத்துாரில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக வந்தார்.அப்போது, அச்சிறுபாக்கம் அருகே, எதிர்பாராத விதமாக, முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்ற போது, லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி பலியானார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அச்சிறுபாக்கம் போலீசார், சரவணனின் உடலைக் கைப்பற்றி, மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, லாரியை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ