உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பேராசிரியர் தனபாலன் கல்லுாரியில் அரங்கம் திறப்பு விழா (நேற்று முன்தினம் கால்பக்கம் விளம்பரம் வந்துள்ளது )

பேராசிரியர் தனபாலன் கல்லுாரியில் அரங்கம் திறப்பு விழா (நேற்று முன்தினம் கால்பக்கம் விளம்பரம் வந்துள்ளது )

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த படூரில் பேராசிரியர் தனபாலன் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லுாரியில் முதலமைச்சர் ஸ்டாலின் அரங்கம் என்ற பெயரில் புதியதாக கலைஅரங்கம் கட்டப்பட்டுள்ளது. இதில், 2,200க்கும் மேற்பட்டோர் அமரலாம். மேலும் குளிர்சாதனம், ஒலி, ஒளி வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.இதற்கான திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. கல்லுாரி தலைவர் புகழேந்தி தனபாலன் தலைமை வகித்தார். செயலர் அமிர்தவர்ஷினி வரவேற்றார். சிறு, குறு நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் புதிய அரங்கத்தை திறந்து வைத்தார்.விழாவில், சிறப்பு விருந்தினர்களாக வி.ஜி.பி., குழும தலைவர் சந்தோஷம், சென்னை பல்கலை மற்றும் காமராஜர் பல்கலை முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லுாரி பொறுப்பு முதல்வர் குருசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை