கரிக்கிலி ஊராட்சியில் ரேஷன் கடை திறப்பு
மதுராந்தகம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் கரிக்கிலி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் சித்தாமூர், கொளத்துார் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இதில், கொளத்துார் பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதி வாசிகள் ரேஷன் பொருட்களை வாங்கிச் செல்ல, 2 கி.மீ., துாரம் நடந்து சென்று, கரிக்கிலி பகுதியில் உள்ள ரேஷன் கடையில், அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்தனர்.கொளத்துார் பகுதியில், பகுதி நேர ரேஷன் கடை அமைக்கக்கோரி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தொடர்ந்து மனு அளித்து வந்தனர்.இதை தொடர்ந்து, கொளத்துார் பகுதியில் நேற்று, பகுதி நேர ரேஷன் கடை துகவக்கப்பட்டது. இதில், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், காஞ்சிபுரம் பார்லிமென்ட் உறுப்பினர் செல்வம், கரிக்கிலி ஊராட்சி தலைவர் புஷ்பா மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.