செங்கை மாவட்ட சர்ச்களில் குருத்தோலை ஞாயிறு விழா
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய தண்டலம், திருப்போரூர், கரும்பாக்கம், கன்னகப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சர்ச்களில் நடந்த குறுத்தோலை ஞாயிறு விழாவில், கிறிஸ்துவர்கள் கையில் குறுத்தோலை ஏந்தி, பவனி வந்தனர்.தண்டலம் நல்மேய்ப்பர் சர்ச்சில், குருத்தோலை ஏந்தியபடி ஓசன்னா பாடலைப் பாடி, கிறிஸ்தவர்கள் பவனி சென்று, சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர்.கரும்பாக்கம் கிறிஸ்து அரசர் சர்ச்சில், குருத்தோலை ஞாயிறு பவனி சிறப்பு ஜெபம் நேற்று நடந்தது. இதில், ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்று, சிறப்பு பிரார்த்தனை மற்றும் கூட்டு திருப்பலி நடந்தது.அதேபோல், திருப்போரூர் துாய ஜார்ஜ் சர்ச், கண்ணகப்பட்டு குழந்தை இயேசு சர்ச்களிலும் குறுத்தோலை ஞாயிறு விழா நடந்தது.