உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின் விளக்குகள் பழுது தென்மேல்பாக்கம் சாலையில் பீதி

மின் விளக்குகள் பழுது தென்மேல்பாக்கம் சாலையில் பீதி

மறைமலைநகர்:சிங்கபெருமாள் கோவில் -- அனுமந்தபுரம் சாலை, 9 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலை திருப்போரூர் - செங்கல்பட்டு சாலையின் இணைப்பு சாலை.தென்மேல்பாக்கம், அஞ்சூர், கொண்டமங்கலம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல, இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலையில் தென் மேல்பாக்கம் -- சிங்கபெருமாள் கோவில் வரை 2 கி.மீ., துாரம், தென் மேல்பாக்கம் ஊராட்சி சார்பில் மின் கம்பங்களில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.மொத்தம் 26 மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு விளக்குகள் பொருத்தப்பட்டு இருந்த நிலையில், இவற்றில் 7 மின் கம்பங்களில் உள்ள மின் விளக்குகள் எரிவதில்லை.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:இந்த 2 கி.மீ., சாலையின் இருபுறமும் வனப்பகுதி உள்ளதால், வெளிச்சம் இல்லாத பகுதியில் வாகனங்களை அச்சத்துடன் இயக்க வேண்டிய சூழல் உள்ளது.சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாமல், வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர். மேலும் இந்த சாலையில், தென்மேல்பாக்கம் அம்பேத்கர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள உயர்கோபுர மின் விளக்கு, பல மாதங்களாக எரியாமல் பழுதடைந்து உள்ளது.இதன் காரணமாக, இந்த சாலையில் இருள் சூழ்ந்து, வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.எனவே, இந்த சாலையில் பழுதடைந்துள்ள மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை