உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வண்டலூர் சாலை விபத்தில் பேப்பர் பாய் உயிரிழப்பு

வண்டலூர் சாலை விபத்தில் பேப்பர் பாய் உயிரிழப்பு

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி ரேவதிபுரம் அருகில் உள்ள சுலோச்சனா நகரில் வசித்து வந்தவர் ஆறுமுகம், 37, இவருக்கு திருமணமாகி, 5 வயதில் மகன் உள்ளார்.இவர், ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு, தினசரி நாளிதழ் வினியோகம் செய்யும் முகவராக வேலை செய்து வருகிறார்.நேற்று அதிகாலையில் நாளிதழ்களை பெற்று கொண்டு வீடு, கடைகளுக்கு வினியோகம் செய்துவிட்டு, வண்டலூர் மேம்பாலம் அருகே வந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்படி, கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார், அவரது உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து வழக்கு பதிந்து போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு, நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ