உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காவலர் குடியிருப்பில் பகுதிநேர ரேஷன் கடை

காவலர் குடியிருப்பில் பகுதிநேர ரேஷன் கடை

செங்கல்பட்டு:மேலக்கோட்டையூரில், காவலர் குடியிருப்பு பகுதியில், பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்பட்டது.வண்டலுார் தாலுகாவில், மேலக்கோட்டையூர் கிராமத்தில், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய, காவலர் குடியிப்பு உள்ளது. இங்குள்ளவர்கள், ரேஷன் பொருள்கள் வாங்க, ரேஷன் கடைக்கு சென்று வர சிரமப்பட்டனர்.இதை தவிர்க்க, நல்லம்பாக்கம் நகர கூட்டுறவு கடன் சங்கம் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும், மேலக்கோட்டையூர் முழு நேர ரேஷன் கடையை பிரித்துதர வேண்டும் என, காவலர்கள், கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.அதன்பின், மேலக்கோட்டையூர் ரேஷன் கடையில், 2,088 ரேஷன் கார்டில், காவலர் குடியிருப்பு பகுதியில், 173 ரேஷன் கார்டுகள் உள்ளன. இதனால், காவலர் குடியிருப்பு பகுதியில், பகுதி நேர ரேஷன் கடை அமைக்க, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மற்றும் வண்டலுார் வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோர், கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.இதையடுத்து, மேலக்கோட்டையூர் காவலர் குடியிப்பு பகுதியில் பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை