மேலும் செய்திகள்
ஆடிபூரத்தையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
29-Jul-2025
அச்சிறுபாக்கம்:களத்துார் கிராமத்தில், பாட்டியம்மன் மற்றும் கொஞ்சிலியம்மன் கோவில், எட்டாம் நாள் திருக்கல்யாணம் திருவிழா, விமரிசையாக நடந்தது. களத்துாரில், ஆற்றங்கரை அருகே, மிகப் பழமையான பாட்டியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஆடி மாதத்தில், பாட்டியம்மன் திருக்கல்யாணம் மற்றும் கிராமத்தினர் சீர்வரிசை எடுக்கும் நிகழ்வு நடந்து வருகிறது. அதன்படி இந்தாண்டு, பாட்டியம்மன் கோவில் அருகில் நேற்று முன்தினம் மாலை, கிராமத்தினர் ஊரணி பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. பாட்டியம்மன் திருக் கல்யாண வைபவத்திற்கு, பாட்டியம் மன் தாய் வீடான களத்துார் கிராமத்தினரால், கல்யாண சீர்வரிசையான மாங்கல்யம், முகூர்த்த புடவை, சீர்வரிசை தட்டு உட்பட, அனைத்தும் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக அம்மன் கோவிலுக்கு வந்தனர். பின், நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு மேல் 7:00 மணிக்குள், பாட்டியம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இந்நிகழ்வில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. திருவிழா ஏற்பாட்டை, விழா குழுவினர் மற்றும் ஊர் மக்கள் செய்தி ருந்தனர்.
29-Jul-2025