உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருத்தேரி சந்திப்பில் நடைமேம்பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை

திருத்தேரி சந்திப்பில் நடைமேம்பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை

மறைமலை நகர்: திருத்தேரி பகுதியில், 'எஸ்கலேட்டருடன்' கூடிய நடைமேம்பாலம் அமைக்க, நெ டுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காட்டாங்கொளத்துார் ஒன்றியம் , சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில், 20,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், 200க்கும் மேற்பட்ட வணிக கட்டடங்கள் உள்ளன. சுற்றியுள்ள செட்டிபுண்ணியம், கொளத்துார், அனுமந்தபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு, இங்கு வந்து செல்கின்றனர். இங்கு, ஜி.எஸ்.டி., சாலை, திருத்தேரி பகுதியில் பாதசாரிகள் கடந்து செல்ல நடைமேம்பாலம் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது: திண்டுக்கல் -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கூடுவாஞ்சேரி -- மகேந்திரா சிட்டி வரை கடந்த 3 ஆண்டுகளாக சாலை விரிவாக்கம் செய் யப்பட்டது. இந்த சாலையில் அனுமந்தபுரம் சாலை சந்திப்பை கடந்து தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்டவை உள்ளன. இங்கு செல்வோர் சாலையை கடக்கும் போது, அடிக்கடி விபத்தில் சிக்கி, உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு, 100 அடிக்கும் அகலமாக சாலை உருவானதால் முதியவர்கள், பெண்கள் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். எனவே, இந்த பகுதியில் 'எஸ்கலேட்டருடன்' கூடிய நடைமேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ