உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திறந்தநிலை கால்வாயால் சுகாதார சீர்கேடில் மக்கள் தவிப்பு

திறந்தநிலை கால்வாயால் சுகாதார சீர்கேடில் மக்கள் தவிப்பு

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி, ராணி அண்ணா நகரில், திறந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ள கால்வாயில் கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு நிலவுகிறது. கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இதில், 17வது வார்டுக்கு உட்பட்ட ராணி அண்ணா நகர், 2வது தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, கடந்த ஆண்டு, தெருவின் இரு பக்கமும், 1.5 அடி அகலத்தில், 120 மீ., நீளத்தில் திறந்த வெளி கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய் திறந்த வெளியில் அமைக்கப்பட்டதால், நீர் தேங்கி நின்று, சில நாட்களில், கழிவு நீராக மாறி, சுகாதார சீர்கேட்டிற்கு வித்திடுகிறது. இதனால், கால்வாயின் மேல் பகுதியை சிமென்ட் சட்டத்தால் மூடவேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், ஒரு வருடமாகியும் கால்வாய் மேல்பகுதி மூடப்படாமல், திறந்த நிலையிலேயே உள்ளதால் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, சிமென்ட் சட்டத்தால் கால்வாயை மூட, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை