உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாற்றுத்திறனாளிகள் பஸ் பயண அட்டை இ-சேவையில் பெறலாம்

மாற்றுத்திறனாளிகள் பஸ் பயண அட்டை இ-சேவையில் பெறலாம்

செங்கல்பட்டு:மாற்றுத்திறனாளிகள் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய, கட்டணமில்லா அடையாள அட்டையை, இ - சேவை மையங்களில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் வேலை, கல்விப் பயிற்சி போன்ற பணிகளுக்கு சென்னை மாநகர, காஞ்சிபுரம் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணம் செய்வதற்கு, கட்டணமில்லா பயண அட்டை வழங்கப்படுகிறது.இவர்கள், வசிக்கும் பகுதியிலுள்ள தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இ - சேவை மையங்களில், தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மருத்துவச் சான்று, புகைப்படம், பணிச்சான்று, கல்லுாரி, சிறப்புப் பள்ளிகளின் கல்விச் சான்று போன்ற அசல் ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும்.அதன் பின், கட்டணமில்லா பயண அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுாறு சதவீதம் கண்பார்வை பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகள், பணிச்சான்று வழங்க தேவையில்லை. 40 சதவீதம் முதல் 69 சதவீதம் வரை உள்ள, பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள், இ- சேவை மையங்களில் பதிவேற்றம் செய்வதற்கு உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, ஏற்கனவே பயன்படுத்தி வரும் பயண அட்டைகளை, வரும் ஜூன் 30ம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை