உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர் 31 வரை விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர் 31 வரை விண்ணப்பிக்கலாம்

செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்க, வரும் 31ம் தேதி வரை கால வரம்பு நீட்டிக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கலெக்டர் சினேகா, கடந்த ஜூன் 28ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கிராம ஊராட்சி, வட்டார ஊராட்சி மற்றும் மாவட்ட ஊராட்சிகளில், மாற்றுத்திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கு, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான ஆவணங்களுடன், கடந்த 20ம் தேதி வரை விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது, மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி, நியமன உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம் அளிப்பதற்கான கால வரம்பு, வரும் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இது குறித்து வெளியிடப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி, தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை