உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின் பாதைக்கு அனுமதி கோரி கலெக்டரிடம் மனு

மின் பாதைக்கு அனுமதி கோரி கலெக்டரிடம் மனு

செங்கல்பட்டு:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகரசபை தலைவர் கார்த்திக் கலெக்டரிடம் அளித்த மனு விவரம்:கூடுவாஞ்சேரி மின் நிலையத்திற்கு கூடுதல் மின்சாரம் கிடைக்கும் வகையில், 33 கே.வி.ஏ., மின் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. மறைமலை நகர் மின் நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரி மின் நிலையத்திற்கு மின் வினியோகம் செய்ய, மறைமலை நகர், காட்டாங்கொளத்துார் ரயில்வே பாலத்தின் கீழ், மின் பாதை அமைக்கப்பட உள்ளது.இந்த பாதை அமைக்கும் பணி செய்ய, ரயில்வே நிர்வாகத்திற்கு, கடந்த பிப்., 1ம் தேதி, மின் வாரியம் பணம் செலுத்தியது. ஆனால், பாதை அமைக்கும் பணிக்கு, ரயில்வே நிர்வாகம் அனுமதி தரவில்லை. ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ