உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பொது பயன்பாடு இடத்தை மீட்க கோரி நகராட்சி கமிஷனரிடம் மனு

பொது பயன்பாடு இடத்தை மீட்க கோரி நகராட்சி கமிஷனரிடம் மனு

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, டிபன்ஸ் காலனியில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை, தனிநபர் ஒருவர் போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்துள்ளார்.இந்த இடத்தை மீட்டுத் தரக் கோரி, டிபன்ஸ் காலனி குடியிருப்போர் நல வாழ்வு சங்கத்தினர் நேற்று, நகராட்சி கமிஷனர் ராணியிடம் புகார் மனு அளித்து உள்ளனர்.மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:டிபன்ஸ் காலனி பகுதியில், 1985ல் 17 ஏக்கர் நிலத்தில் வீட்டு மனை போடப்பட்டது.பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சிறுவர் பூங்கா மற்றும் பொது பயன்பாட்டிற்கு இடம் ஒதுக்கப்பட்டது. கடந்த, 2005ம் ஆண்டு, போலி ஆவணங்கள் தயாரித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட இடங்களை, கூடுவாஞ்சேரி சார் - பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.அவற்றை பல மனைகளாக பிரித்து, தனிநபர்களுக்கு விற்றுள்ளனர். அதற்கு பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு, வரைபட அனுமதியும் வழங்கப்பட்டு உள்ளது.இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு புகார் அளித்து, அதன்படி விசாரணை நடந்தது. வண்டலுார் தாசில்தாரின் பரிந்துரைப்படி பட்டாவை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை மீட்டுத் தர வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.மனுவை பெற்ற நகராட்சி கமிஷனர் ராணி, அது குறித்து நேரில் வந்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்த இடத்தின் தற்போதைய மதிப்பு 6 கோடிக்கு ரூபாய்க்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ