உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / உடல் உழைப்பு தொழிலாளர் மாநில பொதுக்குழு கூட்டம்

உடல் உழைப்பு தொழிலாளர் மாநில பொதுக்குழு கூட்டம்

மதுராந்தகம், -மதுராந்தகத்தில், தமிழ்நாடு கட்டுமான உடல் உழைப்பு தொழிலாளர் நல மத்திய ஐக்கிய சங்கத்தின், மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று, நடந்தது.மாநிலத் தலைவர் குமார் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் ராஜசேகர் வரவேற்றார். 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். இதில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும்.தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்.தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை விண்ணப்பித்தால் 30 நாட்களுக்குள் உதவி தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !