மேலும் செய்திகள்
இலவச கண் சிகிச்சை முகாம்
08-Oct-2025
தம்பு மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம்
27-Oct-2025
செய்யூர்: ஓதியூரில், இலவச பிசியோதெரபி மருத்துவ முகாம், நடந்தது. செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஓதியூர் கிராமத்தில், கெங்கையம்மன் கோவில் அருகே, இலவச பிசியோதெரபி மருத்துவ முகாம் நடந்தது. சென்னை மீனாட்சி பிசியோதெரபி கல்லுாரி மாணவியர் நடத்திய இந்த முகாமில் கழுத்து வலி, முதுகுவலி, தசை பிடித்தம் போன்ற எலும்பு, மூட்டு சம்பந்தமான பிரச்னைகளுக்கு பரிசோதனை செய்து, பிசியோதெரபி சிகிச்சை அளித்தனர். மேலும் குருத்தெலும்பு தேய்மானம், கால்சியம் குறைபாடு, மூட்டு தேய்மானம், முழங்கால் தசைகளை வலுப்படுத்துவது மற்றும் அறுவை சிகிச்சை இல்லாமல் எலும்பு தேய்மானப் பிரச்னைகளுக்கு பிசியோதெரபி சிகிச்சை வாயிலாக தீர்வு காணுவது குறித்து, கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
08-Oct-2025
27-Oct-2025