மாணவர்கள் அறைகளில் போலீசார் திடீர் சோதனை
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய சென்னை புறநகர் பகுதிகளில், போலீசார் தீவிரமாக கண்காணித்து, போதை பொருட்கள் விற்பவர்களை கைது செய்து வருகின்றனர்.இருப்பினும், புதிது புதிதாக போதைப் பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். மேலும், மாணவர்களிடையே போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.எனவே, இதனை தடுக்க, திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய கேளம்பாக்கம், படூர் பகுதிகளில், கல்லுாரி மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில், நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.சோதனையில், கேளம்பாக்கம், தாழம்பூர் போலீசார் 50க்கும் மேற்பட்டோர், பல குழுக்கலாக பிரிந்து, போதை பொருட்கள் பயன்படுத்துகின்றனரா அல்லது விற்பனையில் ஈடுபடுகின்றனரா என, பல கோணத்தில் சோதனை செய்தனர்.இந்த சோதனையில் ஏதும் சிக்கவில்லை என தெரிகிறது. எனினும், மேலும் விசாரித்து வருகின்றனர்.