உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தாயை வெட்டிய மகனை தேடும் போலீசார்

தாயை வெட்டிய மகனை தேடும் போலீசார்

பெரும்பாக்கம்: சென்னை, துரைப்பாக்கம், கண்ணகி நகரை சேர்ந்தவர் முருகன், 43. இவரது மனைவி செல்வகுமாரி, 40. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஆகாஷ், 23.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், செல்வகுமாரிக்கு பக்கத்து வீட்டில் வசித்த ஸ்டீபன் ராஜ், 38, என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு, கணவர், பிள்ளைகளை பிரிந்து, தற்போது ஸ்டீபனுடன் பெரும்பாக்கத்தில் வசித்து வருகிறார்.மனைவி பிரிந்ததால் மனமுடைந்த முருகன், எட்டு மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். தந்தையின் மரணத்திற்கு காரணம் தாய் செல்வகுமாரி தான் என, தாய் மீது ஆகாஷ் கோபத்தில் இருந்துள்ளார்.நேற்று முன்தினம் நள்ளிரவு, பெரும்பாக்கம் சென்ற ஆகாஷ், தனது தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், செல்வகுமாரியின் இரு கையிலும் வெட்டிவிட்டு தப்பினார்.பலத்த காயம் அடைந்த செல்வகுமாரியை, அக்கம் பக்கத்தினார் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். புகாரின்படி, பெரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவாக உள்ள ஆகாஷை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை