உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வண்டலுாரில் காணும் பொங்கல் கூட்டம்: அதிகாரிகள் ஆலோசனை

வண்டலுாரில் காணும் பொங்கல் கூட்டம்: அதிகாரிகள் ஆலோசனை

தாம்பரம்,ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் பண்டிகையின் போது, வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு, ஏராளமான பார்வையாளர்கள் வருவர். கடந்த காணும் பொங்கலன்று, 23,000 பேர் மட்டுமே வந்தனர். இது கடந்த காலங்களை காட்டிலும் மிக குறைவு.கடந்தாண்டு பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு, டிக்கெட் கட்டண உயர்வே காரணம் என, குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது, வண்டலுார் பூங்காவில் டிக்கெட் கட்டணம், 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பொழுது போக்கு இடமாக விளங்கும் இப்பூங்காவில், டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் போது பார்வையாளர்களிடம் அதிருப்தி ஏற்படும்.இந்நிலை நீடித்தால், வரும் ஆண்டுகளில் வண்டலுார் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை முற்றிலும் குறைய வாய்ப்பு உள்ளது.இந்நிலையில், இந்த காணும் பொங்கலன்று வரும் மக்கள் கூட்டத்தை சமாளிப்பது தொடர்பாக, அனைத்து துறை அதிகாரிகளுடன், நேற்று முன்தினம், பூங்கா அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.வனம், வருவாய், காவல், உள்ளாட்சி, தீயணைப்பு உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில், காணும் பொங்கல் கூட்டத்தை சமாளிப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை