உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆப்பூர் சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி

ஆப்பூர் சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி

மறைமலைநகர்:மறைமலைநகர் - ஆப்பூர் சாலை 7 கி.மீ., நீளம் உடையது. இந்த சாலை சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார் சாலையின் இணைப்பு சாலை.இந்த சாலையை திருக்கச்சூர்,பேரமனுார், சட்டமங்கலம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலையில் சட்ட மங்கலம், பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை குண்டும் குழியும் ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுகின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி