மேலும் செய்திகள்
தேய்பிறை அஷ்டமி வழிபாடு
23-Mar-2025
கரூர் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
11-Apr-2025
திருப்போரூர்:திருப்போரூர் கைலாசநாதர் கோவிலில், பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது.திருப்போரூர் பிரணவ மலையில், பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, பங்குனி மாத பிரதோஷமான நேற்று, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பிரதோஷத்தையொட்டி, மாலை 6:00 மணியளவில் சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.உற்சவர், கோவிலைச் சுற்றி மூன்று முறை வலம் வந்தார்.சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.அதேபோல், திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய செங்கண்மால் கிராமத்தில் உள்ள செங்கண்மாலீஸ்வரர் கோவில், செம்பாக்கம் ஜம்புகேஸ்வரர் கோவில், மாம்பாக்கத்தில் உள்ள தெய்வநாயகி சமேத முருகநாதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும், பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.
23-Mar-2025
11-Apr-2025