உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தொடர் மின்வெட்டால் புதுப்பட்டினத்தில் பாதிப்பு

தொடர் மின்வெட்டால் புதுப்பட்டினத்தில் பாதிப்பு

புதுப்பட்டினம்:புதுப்பட்டினத்தில் அடிக்கடி மின் வினியோகம் துண்டிப்பால் பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.அணுசக்தி துறையைச் சேர்ந்த கல்பாக்கம் நகரியம் பகுதியை ஒட்டி புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம் ஆகிய ஊராட்சிப் பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் சமீப காலமாக பகலிலும், இரவிலும் வரைமுறையின்றி, அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.மீண்டும், சில மணி நேரம் கடந்தே மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. மின் வினியோகம் துவங்கிய அரைமணி நேரத்தில், மீண்டும் துண்டிக்கப்படுகிறது.நேற்று முன்தினம் பலமுறை மின் வினியோகம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது:கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ள எங்கள் பகுதியில், அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுவது, அதிருப்தியை ஏற்படுத்துகிறது. வியாபாரம், தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இதனால், இரவில் திருட்டுகள் நடக்க வாய்ப்புள்ளது. இதே நிலை நீடித்தால், பொதுமக்களை திரட்டி, போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !