உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கொள்முதல் நிறுத்தம்

கொள்முதல் நிறுத்தம்

கொள்முதல் நிறுத்தம்செங்கல்பட்டு மாவட்டம், படாளம் அருகே புளிப்பரக்கோவில் பகுதியில், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் வாயிலாக, அரசு நேரடி கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.இங்கு படாளம், எல்.என்.,புரம், அரசர் கோவில் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள், தாங்கள் விளைவித்த நெல்லை, அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில், கடந்த 25 நாட்களுக்கும் மேலாக கொட்டி வைத்து, பாதுகாத்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக, நெல் கொள்முதல் செய்யப்படாமல் இருப்பதால், விவசாயிகள் இரவு, பகலாக பாதுகாத்து வருகின்றனர்.கடந்த சில நாட்களாக கோடை மழையும் பெய்து வருவதால், நெல் நனைந்து வீணாகிறது.அதனால், பெருத்த நஷ்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.மேலும், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட, 10,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள், உரிய பாதுகாப்பின்றி, சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்படாமல் வைக்கப்பட்டுள்ளதால், மழையில் நனைந்து வீணாவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.எனவே, உடனடியாக விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்யவும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்கிற்கு எடுத்துச் செல்லவும், நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ