ஊத்துக்கோட்டை ஏரியில் மலைப்பாம்பு சிக்கியது
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் ஏரி அருகே பதுங்கிய மலைப்பாம்பை, தீயணைப்புத் துறையினர் பிடித்தனர். ஊத்துக்கோட்டை ஏரியை ஒட்டி விளை நிலங்கள் மற்றும் குளங்கள் உள்ளன. நேற்று மாலை, ஏரியை ஒட்டி உள்ள இடத்தில் மீன் பிடி வலை இருந்தது. வளைக்குள் மலைப்பாம்பு ஒன்று இருந்தது. இதை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து ஊத்துக்கோட்டை போலீசார் மற்றும் தேர்வாய் சிப்காட் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு நிலைய அதிகாரி வினாயகமூர்த்தி தலைமையில் வீரர்கள் வந்து மலைப்பாம்பை பிடித்து, சீத்தஞ்சேரி வன காப்பாளர்கள் விக்னேஷ், அதிசயம் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.