உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வெறிநோய் தடுப்பூசி முகாம்

வெறிநோய் தடுப்பூசி முகாம்

மதுராந்தகம்:உலக வெறிநோய் ஒழிப்பு தினத்தையொட்டி, நேற்று மதுராந்தகம் கால்நடை மருந்தகத்தில், சென்னை கால்நடை மருத்துவ கல்லுாரி முதல்வர் கருணாகரன், கால்நடை நோய் தடுப்பு மருத்துவ பேராசிரியர் பிரேமலதா முன்னிலையில், இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது.உலக சுகாதார அமைப்பின் குறிக்கோளான, 2030ம் ஆண்டுக்குள் நாய்கள் வாயிலாக மனிதனுக்கு பரவும் வெறி நோயை ஒழிக்க, இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் கால்நடை மருத்துவத் துறையுடன் இணைந்து, மதுராந்தகம் கால்நடை மருந்தகத்தில் நடத்தப்பட்டது.இதில், வெறி நோயை ஒழிப்போம் என்ற தலைப்பில், உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.பின், செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி அட்டை மற்றும் மருத்துவ உபகரணங்களும், சிறந்த வளர்ப்பு நாய்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.மதுராந்தகம் டவுன் பகுதியில், நாய்கள் வளர்ப்போர் 50க்கும் மேற்பட்டோர், நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.இதில், கால்நடை வட்டார மருத்துவர் விஜயகுமார் மற்றும் மருத்துவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை