உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காஞ்சி - செங்கை இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு ரயில்வே கமிட்டி ஒப்புதல் அடுத்தகட்ட பணிகள் 2 மாதத்தில் துவக்கம்

காஞ்சி - செங்கை இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு ரயில்வே கமிட்டி ஒப்புதல் அடுத்தகட்ட பணிகள் 2 மாதத்தில் துவக்கம்

காஞ்சிபுரம் வழியாக செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே, 12 ரயில் நிலையங்கள் வாயிலாக, ஆண்டுதோறும் 35 கோடி ரூபாய்க்கு மேலாக வருவாய் கிடைத்தும், இரட்டை ரயில் பாதை அமைக்காமல் இருப்பதால், பயணியர் அதிருப்தி அடைந்து வந்தனர். இந்நிலையில், இத்திட்டத்திற்கு கமிட்டியில் ஒப்புதல் கிடைத்து உள்ளதாகவும், அடுத்தகட்ட பணி இரு மாதங்களில் துவங்கும் எனவும், ரயில்வே தெரிவித்துள்ளது.தெற்கு ரயில்வேயின், சென்னை மண்டலம் கீழ் இயக்கப்படும் மின்சார ரயில்கள், காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு, தாம்பரம், ஆவடி, வேளச்சேரி, அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் இயக்கப்படுகின்றன.நாள் முழுதும், மின்சார ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. ஆனால், அதிக பயணியர் பயன்படுத்தும் செங்கல்பட்டு - அரக்கோணம் இடையேயான பகுதிகளுக்கு, போதிய ரயில் சேவைகள் இருப்பதில்லை. இயக்கப்படும் மின்சார ரயில்கள் எண்ணிக்கையும் குறைவாக உள்ளன.காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு சென்று பணிபுரிவோர் மற்றும் சொந்த வேலை காரணமாக, ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. பயணியர் எண்ணிக்கை அதிகரிப்பதால், ரயில்வே நிர்வாகத்திற்கு வருவாயும் அதிகரித்து வருகிறது. வருவாய் அதிகரிக்கும் அதேசமயம், அதற்கான வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்யாதது, பயணியருக்கு பல ஆண்டுகளாக கவலை அளிக்கிறது.செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே, 56 கி.மீ., துாரத்தில், 12 ரயில் நிலையங்களின் வருமானம், ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாயாக உயர்ந்து கொண்டே வருகிறது.இந்த 12 ரயில் நிலையங்கள் வாயிலாக, ஒவ்வொரு ஆண்டும் 35 கோடி ரூபாய்க்கு மேலாக, ரயில்வே நிர்வாகத்திற்கு வருவாய் கிடைக்கிறது.இருப்பினும், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் இடையே, 30 கி.மீ., துாரம் இரட்டை ரயில் பாதை அமைக்காமல், பல ஆண்டுகளாக ரயில்வே நிர்வாகம் மெத்தனமாக செயல்பட்டு வருகிறது.அதிகபட்சமாக, அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஆண்டுதோறும் 15 - 16 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ஆண்டுதோறும் 12 - 15 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது.- நமது நிருபர் -கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் கிடைத்தபோதும், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் இடையேயான, கூடுதல் ரயில் சேவைகளும், அடிப்படை தேவைகளும், இன்று வரை சரியாக கிடைக்காமலேயே உள்ளது.ரயில் பயணியர், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வரும் இரட்டை ரயில்பாதை இன்று வரை அமைக்கப்படாமலேயே இருப்பதால், பாலுார், வாலாஜாபாத் ரயில் நிலையங்களில், எதிரே வரும் ரயிலுக்காக, மற்றொரு ரயில் மணிக்கணக்காக காத்திருக்க வேண்டிய நிலை தொடர்கிறது.பாலுாரில் மட்டுமல்லாமல், காஞ்சிபுரம் ரயில் நிலையத்திலும், எதிரே வரும் ரயிலுக்காக மற்றொரு ரயில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.மாவட்ட தலைநகரான காஞ்சிபுரத்தில், இரு ரயில் நிலையங்கள் செயல்படுகின்றன. இந்த இரு ரயில் நிலையங்களிலுமே, குடிநீர், கழிப்பறை, நிழற்குடை என, எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் உள்ளது.கழிப்பறையை ரயில் பயணியர் பயன்படுத்த வேண்டுமானால், ரயில் நிலைய ஊழியர்களிடம் சாவியை வாங்கி வந்து, கழிப்பறையை திறந்து பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.காலை, இரவு என 24 மணி நேரமும் கழிப்பறை பூட்டியே கிடக்கிறது. மாற்றுத்திறனாளிகளால் கூட பயன்படுத்தாத நிலையே நீடிப்பதால், பயணிர் அதிருப்தி அடைகின்றனர்.பலமுறை மனு அளிப்புசெங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் இடையே இயக்கப்படும் ரயில்களில் டிக்கெட் வாயிலாக மட்டும் பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது.ஆனால், இன்று வரை இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். ரயில்வே பயணியர் சங்கமும், ரயில்வே துறை நடத்தும் கூட்டங்களிலும், அதிகாரிகளை நேரில் சந்தித்தும் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. காஞ்சிபுரம் வழியாக, செங்கல்பட்டு - அரக்கோணம் இடையேயான இரட்டை ரயில் பாதை அமைக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ரயில் பயணியர்விரைவில் 'சர்வே'செங்கல்பட்டு - அரக்கோணம் இடையேயான இரட்டை ரயில்பாதை திட்டத்திற்கு, ரயில்வே கமிட்டியில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. திட்டத்திற்கான சர்வே எடுப்பது, விரிவான திட்ட அறிக்கை தயார்படுத்துவது போன்ற பணிகள் இரண்டு மாதங்களில் மேற்கொள்ளப்படும்.- தெற்கு ரயில்வே துறை அதிகாரி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை