உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பைக் மீது லாரி மோதி ரயில்வே ஊழியர் பலி

பைக் மீது லாரி மோதி ரயில்வே ஊழியர் பலி

பம்மல்:பல்லாவரம் அடுத்த பொழிச்சலுார், பத்மநாபா நகரைச் சேர்ந்தவர் செல்வகுமார், 56; ரயில்வே ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு பம்மல் அருகே நாகல்கேணி பகுதியில் பைக்கில் சென்றார். அப்போது அந்த வழியே வேகமாக வந்த லாரி மோதியது. இதில், பலத்த காயமடைந்த செல்வகுமார், சம்பவ இடத்திலேயே பலியானார். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், செல்வகுமார் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான ஜானகிராமன், 33, என்பவரை, கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ