சோத்துப்பாக்கத்தில் ரயில்வே கேட் மூடல்
மேல்மருவத்துார்,:வந்தவாசி -- செய்யூர் மாநில நெடுஞ்சாலையில், சோத்துப்பாக்கம் பகுதியில் செங்கல்பட்டு- விழுப்புரம் மார்க்கத்தில், ரயில் தண்டவாளத்தை கடக்கும் கேட் எண்.74 உள்ளது.சோத்துப்பாக்கத்தில், தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், நேற்று முதல் ஜன., 4ம் தேதி வரை, இரவு 7:30 மணி முதல் நள்ளிரவு 12:30 மணி வரை, ரயில்வே கேட் மூடப்படும்.பொதுமக்கள், வாகன ஓட்டிகள், கனரக வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையை பயன்படுத்தவும் என, தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.இதனால், மாற்றுபாதையை பயன்படுத்த மேல்மருவத்துார் காவல் நிலையம் சார்பாக, அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.மாற்றுப் பாதையாக, மதுராந்தகம் மற்றும் அச்சிறுபாக்கம் அடுத்த வெங்கடேசபுரம் வழியாக செய்யூர் சென்றடையலாம்.