செங்கை புறநகரில் மழை
மறைமலை நகர்:செங்கல்பட்டு புறநகர் பகுதிகளான சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், காட்டாங்கொளத்துார், பொத்தேரி, ஆப்பூர் மற்றும் சுற்றிய கிராமங்களில் நேற்று மதியம் 1 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் மழை காரணமாக, வாகன ஓட்டிகள், பெண்கள், பேருந்து நிறுத்தங்களில் காத்திருந்த பயணியர் உள்ளிட்டோர் மழையில் நனைந்தபடி சென்றனர். மறைமலை நகர் சேக்கிழார் தெரு, அடிகளார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தெருக்களில் தேங்கிய மழைநீரில் மக்கள் கடந்து சென்றனர்.