உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வண்டலுார் ரயில் நிலையம் எதிரே இணைப்பு சாலை தடுப்புச் சுவர் அகற்றம்

வண்டலுார் ரயில் நிலையம் எதிரே இணைப்பு சாலை தடுப்புச் சுவர் அகற்றம்

வண்டலுார்: வண்டலுார் ரயில் நிலையம் எதிரே, ஜி.எஸ்.டி., சாலைக்கும், இணைப்பு சாலைக்கும் இடையிலான தடுப்பு சுவரை, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றி வருகின்றனர். செங்கல்பட்டு முதல் வண்டலுார் உயிரியல் பூங்கா இடையிலான 2500 மீ., துாரமுள்ள ஜி.எஸ்.டி., சாலை இடையே, வண்டலுார் ரயில் நிலைய மேம்பாலம் உள்ளது. ஜி.எஸ்.டி., சாலையுடன் வாலாஜாபாத் சாலையை இணைக்கும்படி, கடந்த 2012ல் இந்த மேம்பாலம் கட்டப்பட்டது. இணைப்பு சாலை வாலாஜாபாத் சாலையில் இருந்து செங்கல்பட்டு மார்க்கத்தில் செல்லும் வாகனங்கள், இந்த மேம்பாலம் வழியாக ஜி.எஸ்.டி., சாலையில் வருகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்பட்ட பின் இந்த மேம்பாலம் வழியாக செங்கல்பட்டு மார்க்கத்தில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை இரு மடங்கு உயர்ந்தது. இதுபோல், தாம்பரம் மார்க்கத்தில் இருந்து செங்கல்பட்டு மார்க்கத்தில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தாம்பரத்தில் இருந்து வரும் வாகனங்களும், வாலாஜாபாத் சாலையில் இருந்து மேம்பாலம் வழியாக வரும் வாகனங்களும், வண்டலுார் ரயில் நிலையம் எதிரே உள்ள ஜி.எஸ்.டி., பிரதான சாலையில் இணைகின்றன. அந்த குறிப்பிட்ட இடம் போதுமான அகலத்தில் இல்லை. இதனால், வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி தினமும் விபத்துகள் அர ங்கேறி வருகின்றன. எனவே, இரு வழித்தட வாகனங்களும் ஒன்றாய் இணையும் இடத்தில், ஜி.எஸ்.டி., சாலையின் அகலத்தை அதிகரிக்கும்படி, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், வண்டலுார் ரயில் நிலையத்தின் எதிரே, பிரதான சாலைக்கும் இணைப்பு சாலைக்கும் இடையே கட்டப் பட்டிருந்த தடுப்பு சுவரை அகற்றி, சாலையை அகலப்படுத்தும் பணி துவக்கப்பட்டது. மேம்பாலம் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் கூறியதாவது: வண்டலுார் ரயில் நிலையம் எதிரே உள்ள இணைப்பு சாலையை, பெரும்பாலான வாகன ஓட்டிகள் பயன்படுத்துவதில்லை. வாலாஜாபாத் சாலையில் இருந்து மேம்பாலம் வழியாக கீழே இறங்கும் வாகனங்களும், தாம்பரத்தில் இருந்து வரும் வாகனங்களும் ஒரே இடத்தில் இணையும்போது, சாலையின் அகலம் குறைவாக உள்ளதால், விபத்துகள் நடக்கின்றன. இதனால், வண்டலுார் ரயில் நிலையம் எதிரே உள்ள அணுகு சாலையின் தடுப்பு சுவரை அகற்றி, ஜி.எஸ்.டி., சாலையின் அகலத்தை அதிகரிக்கும் பணியை துவக்கி உள்ளோம். மேம்பாலத்தின் இறங்கு பகுதியில் இருந்து, வண்டலுார் வனத்துறை அலுவலகம் வரை, 200 மீ., துாரத்திற்கு இணைப்பு சாலையின் தடுப்பு சுவர் அகற்றப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை