உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / உயர்கோபுர மின்விளக்குகள் பழுது சிங்கபெருமாள் கோவிலில் அச்சம்

உயர்கோபுர மின்விளக்குகள் பழுது சிங்கபெருமாள் கோவிலில் அச்சம்

சிங்கபெருமாள் கோவில்:சிங்கபெருமாள் கோவிலில், உயர் கோபுர மின்விளக்குகள் பழுதடைந்து உள்ளதால், பகுதிமக்கள் அச்சத்தில் உள்ளனர்.காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சி தேரடி தெருவில், நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இங்கு ஊராட்சி சார்பில், பொதுமக்கள் வசதிக்காக உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.இந்த மின் விளக்குகள் இரவு நேரங்களில் முறையாக எரியாததால், இரவுப் பணி முடிந்து இந்த வழியாக வீட்டிற்குச் செல்லும் பெண்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.இந்த பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி, மொபைல்போன் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.அதனால், இந்த உயர்கோபுர மின் விளக்குகளை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி