மேலும் செய்திகள்
பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்
10-Jan-2025
மதுராந்தகம்:மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பறிமுதல் செய்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை, பொது ஏலம் விட வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், குற்ற சம்பவங்கள் மற்றும் மண் திருட்டில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.கடந்த சில ஆண்டுகளாக, ஒரே இடத்தில் இந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் தங்குமிடமாக மாறியுள்ளது.இதனால், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்கள், அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.துறை சார்ந்த அதிகாரிகள் இந்த வாகனங்களை ஆய்வு செய்து, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பொது ஏலம் விட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10-Jan-2025