உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வீரபோகம் பாலம் அமைக்கும் பணி மழைக்கு முன் முடிக்க கோரிக்கை

வீரபோகம் பாலம் அமைக்கும் பணி மழைக்கு முன் முடிக்க கோரிக்கை

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அருகே செங்காட்டூர் - வீரபோகம் கிராமம் செல்லும் 3.5 கி.மீ., அளவிலான தார் சாலை உள்ளது.இந்த சாலையை, செங்காட்டூர், பாக்குவாஞ்சேரி, அனுமந்தபுரம், மருதேரி உள்ளிட்ட கிராம மக்கள், தினசரி பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைக்குச் சென்று வர பயன்படுத்துகின்றனர்.சாலையின் நடுவே வீரபோகம் ஏரியின் நீர்வரத்துக் கால்வாயை கடக்கும் தரைப்பாலம் இருந்தது. 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தரைப்பாலம் நாளடைவில் சேதமடைந்தது.இந்நிலையில், நபார்டு நிதியின் கீழ், ஊரக வளர்ச்சித்துறை சார்பாக, 1.78 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 30 மீட்டர் நீளம் 7.5 மீட்டர் அகலம் அளவுடைய புதிய பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.கடந்த ஆண்டு ஆக., மாதம் கட்டுமான பணி துவங்கியது. அடித்தளம் அமைக்கும் பணி நடந்து வந்த நிலையில், பருவமழை துவங்கி கால்வாயில் நீர்வரத்து அதிகரித்ததால், கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன.பின், பிப்., மாதம் கால்வாயில் நீர்வரத்து குறைந்த நிலையில், கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டு நடந்து வருகிறது.தற்போது வரை பாலம் அமைக்கும் பணி நிறைவு பெறாததால், அப்பகுதி வழியாக வயலுக்கு வேலைக்கு செல்லும் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பருவமழைக்கு முன் பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி