உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் கழிப்பறை பணி விரைந்து முடிக்க கோரிக்கை

மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் கழிப்பறை பணி விரைந்து முடிக்க கோரிக்கை

மதுராந்தகம்: மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில், கழிப்பறை கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டுமென, நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் 17-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனையை சித்தாமூர், சூனாம்பேடு, அச்சிறுபாக்கம், மதுராந்தகம், ராமாபுரம், வேடந்தாங்கல் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதில், நாள்தோறும் புறநோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் என 1,300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், புறநோயாளிகள் பிரிவு செயல்படும் பகுதியில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 2025- -26 ல், 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் கழிப்பறைகள் கட்டுமான பணி துவங்கப்பட்டது. இந்நிலையில், பணி முடிவு பெறாமல் உள்ளது. மருத்துவமனை வளாகத்தில் போதிய அளவு கழிப்பறை வசதி இல்லாததால் நோயாளிகள் பெரிதும் அவதி அடைகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகத்தினர் உரிய ஆய்வு செய்து, கட்டுமான பணியை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, நோயாளி கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை