உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பழுதான மேல்நிலை தொட்டி புதிதாக அமைக்க கோரிக்கை

பழுதான மேல்நிலை தொட்டி புதிதாக அமைக்க கோரிக்கை

செய்யூர், செய்யூர் அருகே விராலுார் ஊராட்சிக்கு உட்பட்ட தேவனுார் கிராமத்தில், நியாய விலைக்கடை அருகே, 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி இருந்தது.குடிநீர் கிணற்றில் இருந்து மின்மோட்டார் வாயிலாக, இந்த மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் வாயிலாக கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.தற்போது, இந்த மேல்நிலை தேக்கத் தொட்டியின் துாண்கள் சேதமடைந்து, சிமென்ட் கலவை உதிர்ந்து உள்ளது. இதனால் நாளடைவில் மேல்நிலை தேக்கத் தொட்டி இடிந்து, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பழைய குடிநீர் தேக்கத் தொட்டியை அகற்றி, புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தேவனுார் கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை