உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கழிவு நீர் கால்வாய் அமைக்க கோரிக்கை

கழிவு நீர் கால்வாய் அமைக்க கோரிக்கை

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம்,தென்மேல்பாக்கம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இங்கு அம்பேத்கர் நகர் சிங்கபெருமாள் கோவில் சாலை ஓரம் கழிவு நீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் புதர் மண்டி கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி நிற்பதால் கொசு தொல்லை மற்றும் துர்நாற்றம் வீசுகிறது.இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:இந்த பகுதியில் குழந்தைகள் தினமும் விளையாடி வரும் பகுதியில் கழிவு நீர் தேங்கி ஆபத்தாக உள்ளது.எனவே இந்த கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்து சிமெண்ட் கால்வாய் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை